Bigg Boss Kavin Marriage

பிக் பாஸ் கவிஞனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Kavin Marriage : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும் தொகுப்பாளராகவும் வலம் வருபவர் கவின். மேலும் இவர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது லிஃப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் கவின் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிக் பாஸ் கொடுத்த டீலை ஏற்றுக்கொண்டு 5 லட்சத்துடன் வெளியேறினார். கவின் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை லாஸ்லியாவை காதலித்து வந்தார். வெளியே வந்த பிறகு இந்த காதல் காணாமல் போய் விட்டது.

இப்படியான நிலையில் தற்போது கவின் ஸ்டைலிஸ்ட் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.