Bigg Boss Julie Photo shoot
Bigg Boss Julie Photo shoot

பிக் பாஸ் ஜூலி அழகு தேவதையாக மாறிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Bigg Boss Julie Photo shoot : தமிழகத்தில் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா. இந்தப் போராட்டத்தால் இவரை மக்கள் பலரும் வீர தமிழச்சி என அழைத்தனர்.

இந்த போராட்டத்திற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்களால் ஜூலியின் பெயர் ரசிகர்களிடையே மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. பலரும் அவரை வெறுக்கவும் விமர்சிக்கவும் தொடங்கினர்.

கூடிக் கொண்டே போகும் கவர்ச்சி.. ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் ஜூலியின் மீதான வெறுப்பு ரசிகர்களிடையே தீரவில்லை. சீசன்2 முடியும் வரை ஜூலியை விமர்சிப்பதை தொடர்ந்து செய்து வந்தனர் அதன் பின்னரே அது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

இந்த நிலையில் தற்போது ஜூலி வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. ஜூலியை பார்க்க அவர் தேவதை போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் ஒரு சில ரசிகர்கள் மேக்கப் ஓவர் எனவும் கிண்டல் அடிக்கின்றனர்.

https://twitter.com/Thiru12020/status/1283978584227340288?s=19
https://twitter.com/sritharan333/status/1283993474732158976?s=19