கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது முடிவை நெருங்கி கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் சீசன் போட்டியாளர்களான சினேகன், காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சுஜா வருநீ, வையாபுரி ஆகியோர் உள்ளே அனுப்பப்பட்டு இருந்தனர்.

இவர்களுக்கு பிக் பாஸ் அழைப்பு விடுத்திருந்த போது ஜூலிக்கு அழைப்பு சென்றுள்ளது. ஆனால் ஜூலி தான் மீண்டும் பிக் பாஸ் வீடு வேண்டாம் என மறுத்துள்ளார். இதுகுறித்து ஜூலி அளித்திருந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது ஜல்லக்கட்டு போராட்டம் மூலமாக எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதை பிக் பாஸ் நிகழ்ச்சியால் கெடுத்து கொண்டேன். எந்த அளவிற்கு மோசமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவிற்கு என்னை மக்கள் திட்டி தீர்த்து விட்டார்கள். தற்போது தான் அந்த நிலை மாறி வருகிறது.

இந்த நேரத்தில் நான் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் மீண்டும் திட்ட தொடங்கி விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் எனக்கும் ஆர்த்திக்கு ஆகாது நாங்கள் உள்ளே இருந்தால் பச்சனை வந்து விடும் என கூறியுள்ளார்.

இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் நான் தற்போது அனிதா MBBS, அம்மன் தாயீ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். இந்த படங்களின் கால் சீட் பிரச்னையாலும் என்னால் பிக் பாஸ் வீட்டிற்குள் வர இயலவில்லை என கூறியுள்ளார்.