திடீரென மருத்துவமனையிலிருந்து ஜூலி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Julie Admitted in Hospital : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. முன்னதாக மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார்.

திடீரென மருத்துவமனையில் ஜூலிக்கு நடந்த அறுவை சிகிச்சை.. வெளியான புகைப்படம்

இதனையடுத்து இறுதியாக ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஓரளவிற்கு நல்ல பெயரை எடுத்துள்ளார். இந்த நிலையில் ஜூலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திடீரென மருத்துவமனையில் ஜூலிக்கு நடந்த அறுவை சிகிச்சை.. வெளியான புகைப்படம்

ரசிகர்கள் பலரும் என்னாச்சு என கேட்க கண்ணில் இருந்த பார்வை குறைபாடு பிரச்சனை காரணமாக லேசர் சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அவர் பூரண குணம் பெற பலரும் வாழ்த்து கூறி உள்ளனர்.