பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ஜனனி தனது முதல் பதிவை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மன்னிப்பு கேட்டு ஜனனி போட்ட முதல் பதிவு... என்ன சொல்கிறார் பாருங்க.!!

ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக ஜனனி இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி கிட்டத்தட்ட 18 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக தகவல்களும் வெளியாகின.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மன்னிப்பு கேட்டு ஜனனி போட்ட முதல் பதிவு... என்ன சொல்கிறார் பாருங்க.!!

இப்படியான நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் முதல் பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் இதுவரை தனக்கு ஓட்டளித்து ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.