
ஜூலி நடித்துவரும் அம்மன் தாய் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மூலம் வீர தமிழச்சியாக பிரபலமானவர் ஜூலி. இந்த போராட்டத்திற்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரை உலகில் பிஸியான நடிகையாகி விட்ட ஜூலி தற்போது அனிதா எம்பிபிஎஸ் மற்றும் அம்மன் தாயி படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் உத்தமி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே அம்மன் தாயி படத்தில் டீஸர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது டிரைலரும் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரை பார்க்கும் போது மிகவும் விறுவிறுப்பாக இருப்பதாகவும் ஆனால் ஜூலியின் நடிப்பில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் எனவும் கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.