நேற்று நடந்த பிக் பாஸ் வீட்டில் நிகழ்வுகளை வைத்து போட்டியாளர் கேப்ரில்லாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Bigg Boss Gabriella Trolls : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன் மற்றும் மொட்ட பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே மோதல் உருவானது. ஒரு வேட்டியைக் கொடுத்து விட்டு அதை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என சுரேஷ் சக்கரவர்த்தியுடன் சண்டையிட்டார் வேல்முருகன்.

இவர்களின் சண்டைகளுக்கு இடையே பின்புறத்தில் கேப்ரில்லா எதையும் கண்டுகொள்ளாமல் நமக்கு சாப்பாடு தான் முக்கியம் என சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் கேப்ரில்லாவை வைத்து பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்