எதுக்கு சீரியல்ல நடிக்கறீங்க என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிய அந்த நிலையில் அதனால் கடுப்பாகிறார் கேப்ரில்லா.

Bigg Boss Gabriella Reply to Fans : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. மேலும் இவர் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். ஆனாலும் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.

இப்படியான நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த சீரியல் வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது.

திரைப்பட நடிகைகளுக்கான பிரத்யேக விருது வழங்கும் விழா | JFW Awards | Part – 5 | Jaya TV

பெண்களை இவ்வாறு குறி வைக்கக் கூடாது : சித்தார்த் பதிவுக்கு, சாய்னா வாய்ஸ்

இப்படியான நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் கேபியிடம் ரசிகர்கள் எதுக்கு சீரியல் போன்ற சின்ன மீடியாவில் நடிக்கிறீர்கள் என தொடர்ந்து கேள்வி எழுப்ப அதனால் அவர் உருவாக்கியுள்ளார். உங்கள் வாழ்க்கையில் நான் தலையிட்டேனா? இதை ஏன் செய்யறீங்க அதை ஏன் செய்யறீங்கனு கேட்டேனா? என்னை வாழ விடுங்க என பதிலடி கொடுத்துள்ளார்.