Bigg Boss Gabriella About Vijay Movies

இரண்டு முறை தளபதி விஜய்யின் பட வாய்ப்பை தவற விட்டதாக பிக் பாஸ் கேப்ரெல்லா பேசியுள்ளார்.

Bigg Boss Gabriella About Vijay Movies : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தளபதி 65. இந்த படத்தில் நெல்சன் திலீப் குமார இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்று ரூபாய் ஐந்து லட்சத்தை வெளியேறிய கேப்ரில்லா விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இரண்டு முறை தவற விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய்யின் பிகில் மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக பேசியிருக்கிறார். ஆனால் படத்தில் வாய்ப்பை தவறவிட என்ன காரணம் என்பது குறித்து அவர் கூறவில்லை.