
பிக் பாஸ் கவினுக்கு கல்யாணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் கவின். இதைத் தொடர்ந்து மேலும் சில சீரியல்களில் நடித்த இவர் தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு மக்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். அதன் பிறகு லிப்ட், டாடா உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த கவின் தற்போது மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இப்படியான நிலையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் தன்னுடைய பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் கவின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்த பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
