Bigg Boss Tharshan
பிக் பாஸ் தர்ஷனின் காதலி யார் என்ற விவரங்கள் இணையத்தில் வட்டமிட்டு வருகின்றன. தர்ஷன் நடிகை ஒருவருடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Bigg Boss Dharshan Lover : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்கு கிழமை 15 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். இந்த 15 பேரில் ஒருவர் தான் இலங்கை தமிழரான தர்ஷன்.

இவர் நடிகையும் மாடலிங்குமான சனம் ஷெட்டியை தான் காதலித்து வருவதாகவும் அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நேற்று இந்த வீட்டிற்குள் 16 போட்டியாளராக மாடலிங் மற்றும் நடிகையுமான மீரா மிதுன் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

இவர் மிஸ் சௌத் இந்தியா என்ற பட்டம் வென்றவர். சில விசயங்களில் ஈடுபட்டதாக கூறி அவருடைய அழகி பட்டத்தை சம்மந்தப்பட்ட நிறுவனம் அதிகாரபூர்வமாக பறித்திருந்தது.

அதன் பின்னர் அந்த பட்டம் சனம் ஷெட்டிக்கு தான் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தர்ஷன் உண்மையாகவே சனம் ஷெட்டியின் காதலராக இருந்தால் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸும் இதை எதிர்பார்த்து தான் மீரா மிதுனை உள்ளே அனுப்பி இருப்பார் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

BB Dharshan Lover

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.