kavin
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின் மீண்டும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day97 Promo4 : பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். சற்றும் விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டு இருக்கிறது இந்த சீசன்.

கவினை மையமாக வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது போல அனைவரும் பேச தொடங்கி விட்டார்கள் அந்த அளவிற்கு பிரபலம் அடைந்து விட்டார் கவின். இதற்கு முன் எந்த பிக் பாஸ் போட்டியாளரும் இந்த அளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கியது இல்லை என்றே கூற வேண்டும்.

அந்த அளவிற்கு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் கவின். திடீர் முடிவாக பிக் பாஸ் இல்லத்தில் இருந்து பிக் பாஸ் அளித்த 5 லட்சம் ரூபாவை எடுத்து கொண்டு வெளியேறினார்.

இந்த நிலையில், வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் லாஸ்லியாவிடம் தான் வெளியேறியதற்கு மன்னிப்பு கேட்டார். தற்போது வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் ‘நான் வெளியே உனக்காக காத்திருக்கிறேன்’எனக் கூறுகிறார். அதைக்கேட்டு ‘நான் என்ன அப்பாவா இதற்கு பயப்பட’ என கமல்ஹாசன் கூற கவின், பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள், ரசிகர்கள் என அனைவரும் வெடித்து சிரிக்கின்றனர்.