Bigg Boss Day87 Promo1

உனக்கு எதிரா ஆரி பேன்ஸ் செயல்படுகிறார்கள் என்பதை ரம்யாவிடம் சூசகமாக தெரிவித்துள்ளார் அவருடைய சகோதரர்.

Bigg Boss Day87 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

ரசிகர்கள் போட்டியாளர்கள் என அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் தற்போது தொடங்கியுள்ளது. நேற்று ஷிவானியின் அம்மா உள்ளே சென்று அவரை மோசமாக திட்டி தீர்த்தார்.

இதனையடுத்து பாலாஜியின் சகோதரர் உள்ளே சென்றிருந்தார். இவர்களைத் தொடர்ந்து தற்போது ரம்யா பாண்டியனின் அம்மா மற்றும் சகோதரர் உள்ளே சென்று உள்ளனர்.

உள்ளே சென்ற அவரது சகோதரர் ரம்யா பாண்டியனிடம் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருந்து அதில் நீ வெளியேறினால் அதற்கு காரணம் நீ அல்ல என கூறுகிறார்.

அதாவது வெளியே ஆரி ரசிகர்கள் இந்த வாரம் ரம்யாவை வெளியேற்ற வேண்டும் என கங்கணம் கட்டி செயல்பட்டு வருகின்றனர். இதனைத்தான் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர் ஆரி ரசிகர்கள் ரம்யாவை மோசமாக விமர்சனம் செய்ததது பற்றி பேசி தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்யாதீர்கள் என கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.