Bigg Boss Day86 Promo1

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிரீஸ் டாஸ்க் இன்று தொடங்க உள்ளது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

Bigg Boss Day86 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் 86வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த Freeze டாஸ்க் இன்று முதல் தொடங்குகிறது.

முதல் ஆளாக ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அம்மாவை பார்த்ததும் ஓடி கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுகிறார் ஷிவானி.

அதன்பின்னர் இருவரும் அமர்ந்து பேசும் போது எதுக்கு நீ உள்ள வந்த? இந்த நடக்கிறது எதுவும் தெரியாதுன்னு நெனச்சியா என கேள்வி கேட்கிறார்.

கிட்டத்தட்ட கடந்த சீசனில் லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்து லாஸ்லியாவை திட்டியது போலவே இந்த காட்சி அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.