Bigg Boss Day81 Promo3

கூட்டம்னா குரூப் தானே ரியோ அது கூட தெரியாதா என ரியோவை ஆரி ஆர்மியினர் வச்சு செய்து வருகின்றனர்.

Bigg Boss Day81 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நான்காவது சீசன் 100வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இன்று 81வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. முதலிரண்டு ப்ரோமோ வீடியோ வெளியாகியிருந்த நிலையில் தற்போது மூன்றாவது வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் கொடுத்த அறிக்கையில் கூட்டமாக விளையாடாதீர்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கு. இதனை ஆரி குரூப்பிஸம் என ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான ரியோ அங்கு குரூப்பிசம்னு இல்லையே என அவரிடம் சண்டையிடுகிறார். இதற்கு கூட்டா விளையாடாதீங்க அதற்கு ஆங்கிலத்தில் குரூப்னு தான் பெயர் என்று நான் நினைக்கிறேன் என ஆரி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூட்டம்னா குரூப்னு கூட தெரியாத ரியோ? என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/Bubbly_Girl__/status/1342039999642923011?s=19
https://twitter.com/PikaPikach1996/status/1342040030399741952?s=19
https://twitter.com/Kuttymaa_/status/1342040062599462913?s=19