Bigg Boss Day79 Promo2 : Friendship Breakup Between Kavin & Sandy | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya | Sandy | Kamal Haasan
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.

Bigg Boss Day79 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்று 79-வது நாள். ப்ரீஸ் டாஸ்க் நடக்க உள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோவில் முகேனின் அம்மாவும் தங்கையும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். இதனையடுத்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் சாண்டி லாஸ்லியாவை விளையாட்டாக கிண்டலடிக்க அவர் கோவித்து கொண்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து சென்று விடுகிறார்.

இதனையடுத்து கவின் நீ ஜாலி ஜாலின்னு சொல்லிட்டு அவளை காயப்படுத்துற என கூற சாண்டியின் முகம் சுருங்கி கண் கலங்கி விடுகிறது.

கவினின் இந்த வார்த்தையால் சாண்டி லாஸ்லியாவிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருப்பதற்காக வாய்ப்பும் உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.