Bigg Boss Day7 Promo : Shocking Video is in Inside.! | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Sherin | Madhumita | Kollywood Cinema News
இன்று வெளியான ப்ரோமோவில் அபிராமி, ஷெரின் இடையிலான மோதலில் அபிராமி கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Bigg Boss Day7 Promo : இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசன் அண்மையில் துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

இதில் சேரன், ஜாங்கிரி மதுமிதா, சாண்டி மாஸ்டர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, செரின், சாக்ஷி அகர்வால், மலேசியாவை சேர்ந்த மாடல்கள் இருவர், பருத்திவீரன் சரவணன், அபிராமி வெங்கடாச்சலம், ரேஷ்மா, வனிதா விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

முதல் வாரம் இந்த நிகழ்ச்சி ஜாலியாகத்தான் சென்றது ஆனால் தற்போது தான் பிக் பாஸ் வீட்டுக்குள் கலவரம் வெடிக்கத் தொடங்கியுள்ளது தினம் தினம் ஒரு சண்டை தினம் தினம் ஒரு பிரச்சினை என யாராவது அழுது கொண்டே இருக்கிறார்கள் அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவில் அபிராமி, ஷெரின் இடையிலான மோதலில் அபிராமி கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.