Bigg Boss Day67 Promo3

உன் ரவுடிஸத்தை இங்க காட்டாத என பாலாஜி முருகதாஸிடம் ரொமான்ஸாக பேசியுள்ளார் ஷிவானி நாராயணன்.

Bigg Boss Day67 Promo3 : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

67 ஆவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது இதற்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் பாலாஜி மற்றும் சிவானி வீடியோ ரொமான்ஸ் ட்ராக் ஓடுகிறது.

இருவரும் மாறி மாறி போடா போடி என செல்லமாக அழைத்துக் கொள்கின்றனர். பட்டப் பெயர் வைத்துக் கூப்பிட சனம் செட்டி இல்லனு நீ ஓவரா பண்ற என கூறுகிறார் சிவானி.

அதற்கு பாலாஜி முருகதாஸ் நீயும் போயிட்டா நான் என்ன பண்ணுவேன்னு தெரியல என கூறுகிறார். அதற்கு நான் போயிட்டா நீ இருப்பியா என கேட்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பாலாஜி, ஷிவானி காதல் ட்ராக் தொடங்கி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.