Bigg Boss Day64 Promo2

இப்படியே விட்டா அவ்வளவுதான் நானும் கிளம்ப வேண்டியதுதான் என அர்ச்சனா அண்ட் கோ டீமிற்கு எதிராக கிளம்பியுள்ளார் ஆரி.

Bigg Boss Day64 Promo2 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக சனம் செட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது போட்டியாளர்கள் உட்பட மக்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஆரி அனிதா பாலாஜி முருகதாஸ் ஆகியோர் ஒன்று சேர்ந்து பேசுகின்றனர்.

நடிகர் ஆரி இப்படி தனித்தனியாக அவங்க எல்லாரும் வெளிய போயிட்டு இருந்தா அந்த குரூப் இன்னும் ஸ்ட்ரங்காக தான் மாறும். அடுத்த வாரம் நான் போவேன் அடுத்து நீ என்ன அப்படியே போக வேண்டியது தான் எனக் கூறுகிறார்.

அதற்கு அனிதா இப்படி விளையாட எதற்கு விளையாடனும் என கேள்வி எழுப்புகிறார். பாலாஜி முருகதாஸ இதைத்தான் நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே சொன்னேன் என கூறுகிறார்.

என்னால் இனி பிக்பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.