Bigg Boss Day54 Promo1 Officially Out Now - Inside the Video | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Vanitha | Madhumitha
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day54 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 50 நாட்களை கடந்து படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் TRP-க்காக ஒரு பெரிய பிளான் போட்டு மக்கள் வெறுத்து வெளியேற்றிய வனிதாவை மீண்டும் வீட்டிற்க்குள் அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதற்குள் வனிதா போட்ட பிள்ளையார் சுழி தான் காரணம்.

வனிதா வந்ததும் மதுமிதாவிடம் நீ முன்ன மாதிரி பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கறது இல்லை என கூறியதும் முடிந்து போன விசயங்களை எல்லாம் கிளறி பிரச்சனை செய்து வருகிறார்.

இன்றும் அந்த பிரச்சனை தொடர லாஸ்லியா கவின் உள்ளிட்டோர் இவ்வளவு நாளா சும்மா இருந்துட்டு இப்போ வனிதா வந்து சொன்னதும் பிரச்சனை பண்றீங்களா என நறுக்கென கேள்வி கேட்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.