Bigg Boss Day51 Promo1

புதிய டாஸ்க் மூலம் பாலாஜி மற்றும் அர்ச்சனா இடையே கொளுத்திப் போட்டுள்ளார் பிக் பாஸ்.

Bigg Boss Day51 Promo1 : தமிழ் சின்னத்திரையின் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

51வது நாளான இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு கால்சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

கால் சென்டரில் பணிபுரிபவர்களுக்கு போட்டியாளர்கள் போன் செய்து அவர்களுக்கு தேவையான தகவல்களை எந்தவித ஒளிவு மறைவு இன்றி கேட்டுக் கொள்ளலாம்.

அப்படி அர்ச்சனா பாலாவுக்கு போன் செய்து நான் மூவரையும் வைத்து விளையாடுவதாக கூறினீர்கள் அது யார் என கேட்கிறார்.

அதற்கு பாலாஜி முருகதாஸ், சோம் ரியோ மற்றும் கேபி என கூறுகிறார்.

இதோ அந்த ப்ரோமோ

https://twitter.com/Biggboss_Twitz/status/1331090199770632194?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.