
ஆரி மற்றும் சம்யுக்தா இடையே அர்ச்சனா சண்டையை மூட்டி விட்டுள்ளார்.
Bigg Boss Day29 Promo3 : உலக நாயகன் கமல்ஹாசன் விட்டுவிட்டு வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ளே சென்றுள்ள அர்ச்சனா தனக்கு ராஜமாதா கெட்டப் கொடுத்ததால் தான் விஜய் ராஜமாதா என எண்ணி அராஜகம் செய்து வருவதாக ரசிகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

அவருக்கும் ஆரிக்கும் இடையே பிரச்சனைகள் முட்டிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் வீட்டில் தலைவரான சம்யுக்தா வீட்டை கிளீன் செய்யுமாறு ஆரியிடம் கூறுகிறார்.
அதற்கு ஆரி செய்ய முடியாது என்பதுபோல கூறுகிறார். தம்மிடம் அர்ச்சனா சொன்னதாக சம்யுக்தா தெரிவித்ததால் நீங்க ஏன் அவங்களுக்கு வக்காலத்து வாங்கறீங்க என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ