Aranthaangi Nisha

வெளியில இருக்காங்க செருப்பால அடிவாங்க என அறந்தாங்கி நிஷா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Day18 Promo2 : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்று சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இன்றைய முதல் புரோமோ விடியோ வில் ரம்யா பாண்டியன் சிவானி மற்றும் ரியோ ராஜ் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ஒரு டாஸ்க் 1 கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளராக மேடையில் ஏறி தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

அந்த வகையில் நிஷா பேசுவது புரளி பேசுபவர்களை வெளியில் இருப்பவர்கள் செருப்பால அடிப்பாங்க எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி நிஷா யாரை சொல்கிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.