Bigg Boss 4 Contestant in Star Hotel

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் கலந்து கொள்ள உள்ள போட்டியாளருக்கு ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Bigg Boss Contestant in Star Hotel : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த இந்த நிகழ்ச்சிக்கான மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளன. நான்காவது சீசன் வெகு விரைவில் ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான சிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், அனுமோகன், ரியோ ராஜ், கேப்ரில்லா உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளவர்கள் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

உன் சாவகாசமே வேணாம்.. பிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை விரட்டி விட்ட விஜய் டிவி – நடந்தது என்ன??

இந்த நிலையில் தற்போது ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ ராஜ் ஆகியோர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.