ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் பிக் பாஸ் அசீம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு உள்ளிட்ட பல சீரியல்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அசீம்.

இவர் இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது அசீம் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளாராம்.

இதற்காக இயக்குனர் தற்போது ராஜஸ்தானில் ஷூட்டிங்கிற்கான இடங்களை தேடும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிகப் பிரபலமான நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

இதனால் அசீம் ரசிகர்கள் கண்டிப்பா இந்த படம் ஹிட் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.