பிரபல இசையமைப்பாளருடன் பணியாற்ற ஆசை என தெரிவித்துள்ளார் பிக் பாஸ் ஏடிகே‌.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஏ டி கே. பல்வேறு படங்களில் இவர் பாடல் பாடியிருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஏடிகே தனது சமூக வலைதள பக்கத்தில் பிரபல இளம் இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக பதிவு செய்துள்ளார்.

அதாவது, கேம் முடிந்துவிட்டது. கபடி வீடியோ வாழ்க்கையில் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இளம் இசையமைப்பாளர் அனிருத்துடன் தான் இணைந்து பணியாற்ற ஆசை என தெரிவித்துள்ளார்.

ஏடிகே-ன் கோரிக்கையை ஏற்று அனிருத் இசையமைக்கும் படத்தில் வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.