பிக் பாஸ் அபிராமி மீண்டும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவில் விளம்பர படங்களிலும் நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்து பிரபலமானவர் அபிராமி. இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அபிராமிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது சூர்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்க உள்ள புதிய படத்தில் அபிராமியும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.