
இரண்டு திருமணம் செய்து ஆயிஷா ஏமாற்றி இருப்பதாக முன்னாள் கணவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ளார் சீரியல் நடிகை ஆயிஷா. விஜய் டிவியில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கியவர் அதன் பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஆட்டிடியூட் காட்டி நடந்து வருவது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஆயிஷாவின் முன்னாள் கணவர் ஒருவர் அவளுக்கு இரண்டு முறை திருமணம் ஆகிவிட்டது. அதன் பிறகு விஷ்ணுவை காதலித்தார், பிறகு லோகேஷை காதலித்தார்.

அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பமே சேர்ந்து இப்படித்தான் ஏமாற்றி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.