தொகுப்பாளினியாக மாறவுள்ளார் பிக் பாஸ் ஆயிஷா.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஒன்று பொன்மகள் வந்தாள். இந்த சீரியல் மூலம் அறிமுகமாகிய பிரபலமானவர் ஆயிஷா. ஜீ தமிழில் சத்யா என்ற சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து உலக நயன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் தற்போது தொகுப்பாளினியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் எக்ஸ்பிரஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.