Bigg Boss Aarthi About Suriya and Jyothika
Bigg Boss Aarthi About Suriya and Jyothika

சூர்யா, ஜோதிகாவை பற்றி கேட்டதற்கு பிக் பாஸ் நடிகை ஆர்த்தி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

Bigg Boss Aarthi About Suriya and Jyothika : தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர் ஆர்த்தி. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்த நிலையில் இவர் இன்று ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ஜோதிகாவை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என கேட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4 எப்போது? தொகுப்பாளர் அதிரடி மாற்றம்? யார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான தகவல்.!

ஆனால் நடிகை ஆர்த்தி அவரை பற்றி ஒரு கட்டுரையே எழுதியுள்ளார். ஜோதிகா நல்ல நடிகை, நல்ல மனைவி, நல்ல அம்மா, நல்ல தோழி என அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இன்னொரு ரசிகர் நடிகர் சூர்யாவை பற்றி சொல்லுங்கள் என கேட்டதற்கு எங்க ஊரு மனுசன் தான், பல பேருக்கு கல்வி பயில உதவராரு அந்தப் புண்ணியம் அவருக்கு எப்போதும் கை கொடுக்கும் என கூறியுள்ளார்.