Bigg Boss Aarav in Villian Role

பிக் பாஸ் ஆரவ் உதயநிதி ஸ்டாலின் படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Aarav in Villian Role : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டவர் ஆரவ்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ்.

பிக்பாஸில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட ஆரவ் அந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த நிலையில், அடுத்ததாக அவர் நடிக்க உள்ள திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ள திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப்படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும் இவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.