இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் என தெரிய வந்துள்ளது.

Bigg Boss 6 6th Elimination Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சாந்தி, அசல் கோலார், ஷெரீனா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் மணிகண்டன் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது.

கடைசி இடத்திலிருந்து மணிகண்டன் திடீரென சரசரவென இரண்டாவது இடத்திற்கு முன்னேற ஒரு அளவிற்கு நல்ல ஓட்டுக்களை பெற்றிருந்த தனலட்சுமி பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளார். இருந்த போதிலும் தனலட்சுமி காட்டிலும் குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ள ராபர்ட் மாஸ்டர் இந்த வார பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.