பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல்நலக் குறைபாடு காரணமாக நமிதா மாரிமுத்து வெளியேறிய நிலையில் மேலும் ஒருவர் உள்ளே செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Bigg Boss 5 Wild Card Entry Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை வெற்றிகரமாக 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் தற்போது ஒரு வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் திருநங்கை நமீதா மாரிமுத்து.

வெளியேறிய நமிதா மாரிமுத்து.. அவருக்கு பதிலாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலம் யார் தெரியுமா??
வழிபாடுகளில், சங்கு முக்கிய இடம் வகிப்பது ஏன்?

ஒரே வாரம் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் உடல்நலக் குறைபாடு காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கான காரணமாக பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமிதா மாரிமுத்துவுக்கு பதிலாக வைல்ட் கார்ட் என்ட்ரியில் ஷகிலாவின் மகள் மிலா உள்ளே செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு அவரும் மிக ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நாம எப்பவும் வாயிலே வண்டி ஓட்டுற ஆளு ! – Actor Manobala Funny Speech | | Aranmani 3 Press Meet

வெகு விரைவில் இந்த வயல்ட் கார்டு என்ட்ரியை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது.