Bigg Boss 4 Telecast Starting Date
Bigg Boss 4 Telecast Starting Date

பிக் பாஸ் சீசன் 4-ன் ஒளிபரப்பு தேதி குறித்து மாஸான தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 4 Telecast Starting Date : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்ட நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

இதுவரை 3 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது 4 சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகி இருந்தது.

இதனையடுத்து இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு துவங்கும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது வரும் அக்டோபர் 4-ம் தேதி இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுகம் நடக்கும் எனவும் அடுத்தாக திங்கட்கிழமை (அக்டோபர் 5-ம் தேதி) முதல் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.