Bigg Boss 4 Second Week Nomination List
Bigg Boss 4 Second Week Nomination List

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

Bigg Boss 4 Second Week Nomination List : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். அக்டோபர் 4ஆம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.

பிக்பாஸ் வீட்டிற்குள் 17 போட்டியாளர்கள் சென்றுள்ளனர். முதல் வார இறுதியில் நடிகை ராதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடந்து முடிந்தது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரின் பெயரைக் கூறி அவர்கள் வெளியேறுவதற்கான காரணத்தையும் கூறினார்.

இறுதியாக அதிகம் பேர் நாமினேட் செய்த 4 பேர் இந்த வார வெளியேற்றத்திற்கு நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் யார் யார் என்பது குறித்த விவரம் இதோ

  1. ஆஜித்
  2. ஆரி
  3. அனிதா
  4. பாலா
  5. சுரேஷ் சக்கரவர்த்தி

இவர்களில் பாலா மற்றும் சிரேஷ்ட கத்தி ஆகிய இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வருகிறது.

செய்திவாசிப்பாளர் அனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார். இதனால் அவர் இந்த வீட்டில் தாக்கு பிடிப்பாரா என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே உள்ளது.

ஆஜித் யாருடனும் பெரிய அளவில் ஒன்று சேராமல் தனித்து இருந்து வருகிறார். இதனால் அவரால் இந்த நிகழ்ச்சியில் பெரிய அளவில் விறுவிறுப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

நடிகர் ஆரிக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு அளவிற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இதனால் அவர் இந்த வார நாமினேஷன் என்று இருந்து காப்பாற்ற படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுரேஷ் சக்ரவர்த்தி தான் தற்போது பிக் பாஸ் சீசன் 4-ன் ஹீரோவாக இருந்து வருகிறார். அவரால் மட்டும்தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என நிச்சயமாக கூறலாம். இதனால் அவர் எப்படியும் காப்பாற்றப்பட்டு விடுவார் என்பதில் சந்தேகமில்லை.

இதன் காரணமாக இந்த ஐவரில் அனிதா அல்லது ஆஜித் ஆகிய இருவரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வருகிறது. உண்மையில் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.