Bigg Boss 4 in Colors Tamil
Bigg Boss 4 in Colors Tamil | சினிமா செய்திகள் | Cinema News | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Tamil Cinema News

விஜய் டிவி இடமிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கை மாறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Bigg Boss 4 in Colors Tamil : தமிழ் சின்னத்திரையின் பிரபல சேனலான விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்.

தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மலையாளம், மராட்டி, கன்னடம் தெலுங்கு என அத்தனை மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை அதிகம் ஷேர் கொடுத்த 5 தமிழ் படங்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் தான் ஒளிபரப்பி வருகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் நான்கையும் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பலாம் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் விஜய் டிவி ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 4ஐ கமல்தான் தொகுத்து வழங்குவார் என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஒருவேளை கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பப்பட்டால் யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.