Bigg Boss 4 Finalize Contestant List
Bigg Boss 4 Finalize Contestant List

பிக்பாஸ் இதில் நான்கில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss 4 Finalize Contestant List : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை மூன்று சீசன்களை நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த பிக் பாஸ் சீசன் 4-ல் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 100 நாட்கள் 16 பிரபலங்கள் என்பதற்கு பதிலாக தற்போது 80 நாட்கள் 12 பிரபலங்கள் என நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய போட்டியாளர்கள் செப்டம்பர் 19-ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

  1. ஷிவானி நாராயணன்

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

  1. ரம்யா பாண்டியன்

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களின் மூலமாக பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது விஜய் டிவியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இதன் காரணமாக இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

  1. கேப்ரில்லா

தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்த கேப்ரில்லா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஜித்தன் ரமேஷ்

திரைப்பட நடிகராக ஜித்தன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிக்பஸ் சீசன் 4 கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

  1. அனு மோகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும் வயதான ஒருவரை உள்ளே அனுப்புவது என்பதே வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் இந்த சீசனில் நடிகரும் இயக்குனருமான அனுமோகன் பங்கேற்க உள்ளதாக தகவல்.

  1. ஆரி

பிரபல நடிகராகவும் ஜல்லிக்கட்டு போராட்டம், சென்னை பெருவெள்ளம் போன்ற சம்பவங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகர் ஆரியும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  1. சூப்பர் சிங்கர் ஆஜித்

2012 ஆம் ஆண்டில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவென்ற ஆஜித் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

Vijay Tv Priyanka Video About Bigg Boss4
  1. ரியோ ராஜ்

சன் மியூசிக் விஜய் டிவி உள்ளிட்டவைகளில் தொகுப்பாளராக இருந்து பிரபலமான ரியோ ராஜ் இந்த சீசனில் பங்கேற்க உள்ளார். பிக் பாஸ் வீட்டில் சாண்டி தன்னுடைய மகளைப் பார்க்க ஏங்கியது போல இந்த சீசனில் ரியோ ராஜ் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

  1. சனம் ஷெட்டி

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷன் காதலியும் மாடல் நடிகையுமான சனம் ஷெட்டி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஒன்பது பேரும் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

12 போட்டியாளர்களில் 9 பேர் யார் என்பது தெரியும் வரை இன்னும் மூன்று பேர் யார் யார் என உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.