பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களில் ஒருவரான சோம் சேகர் என்பவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Bigg Boss 4 Contestants Som Sekar Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 16 போட்டியாளர்கள் என்பது இந்த முறை 12 போட்டியாளர்களாக குறைக்கப்பட்டுள்ளது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியும் 80 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.

Bigg Boss Tamil 4 Contestants Update :
Bigg Boss Tamil 4 Contestants Update :

இந்த 12 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொள்ள இருப்பவர் சோம் சேகர். பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட முக்கிய முகேனை போலவே இவரும் மாடலிங், ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவைகளில் நடித்துள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இவர்தான் அடுத்த முகேன் என சொல்லி வருகின்றனர்.

இது உண்மையாகுமா என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பானால் தெரியும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.