Bigg Boss 4 Contestants Details
Bigg Boss 4 Contestants Details

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீரிலும் கலந்து கொள்ளப்போகும் பதினான்கு பிரபலங்கள் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

Bigg Boss 4 Contestants Details : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக நான்காவது சீசன் தொடங்க உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ முதல் ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்து கொள்ளப்போகும் பதினான்கு பிரபலங்கள் இவர்கள் தான் என லிஸ்ட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ரூபாய் ஒரு கோடி சம்பளம்.. பிரபல இளம் நடிகையுடன் பரபரப்பாக நடக்கும் பேச்சுவார்த்தை – பிக் பாஸ் சீசன் 4 குறித்து வெளியான தகவல்!

அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள பிரபலங்களின் பெயர்கள் இதோ

  1. ஷிவானி நாராயணன்
  2. அனு மோகன்
  3. பூனம் பாஜ்வா
  4. சூர்யா தேவி
  5. சனம் ஷெட்டி
  6. டிக் டாக் இலக்கியா
  7. ரம்யா பாண்டியன்
  8. புகழ்
  9. சிவாங்கி
  10. மணிமேகலை
  11. அம்ரிதா
  12. அதுல்யா ரவி
  13. கிரண் ராத்தோட்
  14. வித்யுலேகா ராமன்

ஆனால் இவர்களில் உண்மையில் யார் யார் பங்கு பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். போட்டியாளர் குறித்து விவரங்களை விஜய் டிவி இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.