Bigg Boss 4 Contestant in Telugu
Bigg Boss 4 Contestant in Telugu

ஆகஸ்ட் 30 முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigg Boss 4 Contestant in Telugu : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளன விரைவில் நான்காவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தெலுங்குவில் நான்காவது சீசன்கள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் ஒளிபரப்ப பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பிக் பாஸ் சீசன் 4-ஐ முதல் சீசனை தொகுத்து வழங்கிய நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4 எப்போது? தொகுப்பாளர் அதிரடி மாற்றம்? யார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான தகவல்.!

இந்த சீசனில் நடிகைகள் ஹம்சானந்தினி, ஸ்ரத்தா தாஸ், யாமினி பாஸ்கர், பிரியா வட்லாமணி ஆகியோரும், டிவி சானல் பிரபலங்களான மஞ்சுஷா மற்றும் விஷ்ணு பிரியா கலந்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் 14 நாட்களுக்கு முன்னதாக கொரானா பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாக சேர்க்கப்பட்டுள்ளது.