Bigg Boss 3 Seventh Eviction : Who Will Eliminate in This Week? | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Losliya Vs Sakshi Aggarwal Vs Abirami
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற விவரங்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.

Bigg Boss 3 Seventh Eviction :கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சென்று கொண்டிருக்கிறது, வாரம் இறுதி என்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகி விடும். அதற்கான காரணம் கமல் ஹாசனும் எலிமினேஷனும் தான்.

இதுவரை இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் என 6 பேர் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

7-வது ஆளாக இன்று ஒருவர் வெளியேற்றப்படுவார், அதற்காக லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி அஃகர்வால் என மூவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் லாஸ்லியா வெளியேற வாய்ப்பே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் மிகவும் குறைவான வித்தியாசத்தில் சாக்ஷி அகர்வாலும் அபிராமியும் குறைந்த ஓட்டுகளையே பெற்றிருந்தார்கள்.

ஆனால் தற்போது அபிராமியின் ஓட்டுகள் ஓரளவிற்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து சாக்ஷி அகர்வால் மூன்றாவது இடத்திலேயே மிக குறைவான ஓட்டுகளுடன் இருந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றனர்.

இதனால் சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சீக்ரெட் ரூமிற்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Bigg Boss Tamil 3 Voting

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.