Bigg Boss 3 Love : First Love in Bigg Boss Season 3.! | Bigg Boss | Bigg Boss Tamil | Kamal Haasan | Kavin | Abirami | Bigg Boss Update
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் காதல் உதயமாகியுள்ளது, இதனால் இனி தான் ஆட்டம் சூடு பிடிக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Bigg Boss 3 Love : பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சுவாரஷ்யமான ஒன்று காதல் தான். முதல் சீனில் ஓவியா, ஆரவ் காதலை போல இரண்டாவது சீசனில் மஹத் யாஷிகா மற்றும் ஷாரிக் ஐஸ்வர்யா பற்றி நிறைய கிசுகிசுக்கள் எழுந்திருந்தன.

தற்போது அதே போல் மூன்றாவது சீசனிலும் முதல் நாளிலேயே கிசுகிசுவில் சிக்க தொடங்கி விட்டனர் கவினும் அபிராமியும்.

ஆம், பிக் பாஸ் காதல் கதை டாஸ்க் ஒன்று கொடுக்க கவினுக்கு காதலியாக நடிக்க ஆர்வத்துடன் ஓடி வந்துள்ளார் அபிராமி.

முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் – அதுவும் இப்படியா?

மேலும் சாக்ஷி அகர்வால், லாஸ்லியாவிடம் முகநூலில் கவின் பெயரில் இருந்து தனக்கு ஒரு பிரண்டு ரெக்வஸ்ட் வந்ததாகவும் அதை பற்றி கவினிடம் கேட்டதற்கு அது நான் இல்லை என கூறியதாகவும் தனக்கு கவின் மீது ஒரு கிரஷ் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் இவர்களுக்குள் காதல் உருவாகும் என நெட்டிசன்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.