Bigg Boss 2nd Week Nomination List : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television
இந்த வார நாமினேஷனில் யார் யார் இடம் பெற்றுள்ளார்கள்? யார் வெளியேற வாய்ப்புள்ளது என்பதையெல்லாம் தற்போது பார்க்கலாம் வாங்க.

Bigg Boss 2nd Week Nomination List : கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி முதல் எவிக்ஷன் நடந்தேறி விட்டது.

முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பாத்திமா பாபு கடந்த வாரம் குறைவான ஓட்டுகள் பெற்றிருப்பதாக கூறி வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து இந்த வார நாமினேஷனில் வனிதா விஜயகுமார், சரவணன், மோகன் வைத்யா, மதுமிதா, மீரா மிதுன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் மக்கள் அனைவருமே வெளியேற்ற வேண்டும் என விரும்புவது வனிதா விஜயகுமாரை தான். காரணம் இதுவரை மக்கள் மத்தியில் இருந்து வெறுப்பை மட்டும் தான் பெற்று வருகிறார்.

முதலில் வெளியேறப்போவது இவரா? தொடங்கிய பிக் பாஸ் நாமினேஷன் – வீடியோவுடன் இதோ.!

அனைவரையும் தரக்குறைவாக நடத்துவது, எல்லாருமே தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தான் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் அதிகமாகவே இருப்பது தான்.

ஆனால் இவரால் தான் பிக் பாஸ் வீடே ரணகளமாகிறது என்பதால் எதையாவது டாஸ்க் கொடுத்து பிக் பாஸ் வனிதாவை காப்பாற்றி விட வாய்ப்பிருப்பதாவே நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

மேலும் மோகன் வைத்யாவை தான் எப்படியும் வெளியேற்றுவார்கள். அல்லது அபிராமி தான் இந்த வார தலைவர் என்பதால் அவருக்கு ஒரு சக்தியை கொடுத்து அதன் மூலமாக வனிதாவை காப்பாற்றி விடுவிகார்கள், இது தான் நடக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஒரு வேலை இப்படி நடந்து விட்டால் இதுவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இறுதியாக இருக்கும், வனிதாவை வெளியேற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், நீங்கள் TRP-காக அதை கெடுத்து விடாதீர்கள் எனவும் டிவி சேனலுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.