Bigg Boss 2

Bigg Boss 2 : படத்தில் ஜோடி சேரும் பிக் பாஸ் 2 பிரபலங்கள் : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட மஹத் மற்றும் யாஷிகா தற்போது இணைந்து நடிக்க உள்ளனர்.

முதலில் சீசன் போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் பியார் பிரேம காதல் என்ற பாடத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அதே போல தற்போது இரண்டாவது சீசன் போட்டியாளர்களாக மஹத்தும் யாஷிகாவும் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

இதற்கான ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. பிக் பாஸ் வீட்டிற்குள் காதலிப்பதாக கூறிய இவர்கள் தற்போது நண்பர்களாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss 2

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.