Bigg Boss 18th Contestant Details - Actress Revealed Secrets | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
வைல் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் மாடலிங் நடிகை ஒருவர் நுழைய வாய்ப்பிருப்பதாக அவரே கூறியுள்ளார்.

Bigg Boss 18th Contestant : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. அனைவரின் வெறுப்பையும் பெற்றிருந்த வனிதா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டு விட்டார்.

இப்படியா பிறந்த நாள் கொண்டாடுங்க, எல்லாம் பணத்திமிரு – யாஷிகா செய்த வேலையை பாருங்க.!

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி போர் அடித்து விடுமோ என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. ஆனால் ஆட்டமே இனி தான் உள்ளது.

ஆம், வைல் கார்டு என்ட்ரியில் கவர்ச்சி நடிகை விசித்ரா உள்ளே செல்ல இருப்பதாக நேற்று தகவல்கள் கசிந்திருந்தன.

அவரை தொடர்ந்து அடுத்த ஆளாக தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி நுழைய வாய்ப்பிருப்பதாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சனம் ஷெட்டி தர்ஷனின் காதலி என்பது ஒரு புறம் இருக்க, மீரா மிதுனிடம் இருந்து பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா பட்டமும் இவரின் கைக்கு தான் மாறியது என்பதால் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நிச்சயம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

பிக் பாஸ் வீட்டிற்குள் போறேன்.. பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை நடிகையின் ட்வீட்.!

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே தனக்கு அழைப்பு வந்ததாகவும் இறுதி பட்டியலில் தான் தன்னுடைய பெயர் இல்லை எனவும் வைல் என்ட்ரியில் உள்ளே நுழைந்தாலும் நுழைவேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.