பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு சேரன் இந்த வாரம் வெளியேற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss 12th Eviction Expectation : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் இரு வாரங்களில் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் இந்த வாரம் டிக்கெட் பினாலே டாஸ்க் கொடுத்துள்ளார். இதனால் டாஸ்க்குகள் முன்பை விட சற்றே கடினமாகியுள்ளன.

தலயா? தளபதியா? டிவி சேனல் நடத்திய கருத்து கணிப்பு – அதிர வைக்கும் இறுதி முடிவு இதோ.!

சாண்டி, தர்ஷன், முகேன் ஆகியோர் இளைஞர்கள் என்பதால் அவர்கள் டாஸ்கில் மும்மரமாக விளையாடி வருகின்றனர். கவின் காதல் கனவில் இருந்து கொண்டு தன்னால் முடிந்த அளவு விளையாடி வருகிறார்.

இவர்கள் அனைவரையும் விட சேரன் வயதில் மூத்தவர் என்பதால் அவரால் மூச்சு பிடித்து விளையாட முடியவில்லை.

மேலும் அவர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமிற்கு சென்று மீண்டும் உள்ளே சென்றுள்ளார்.

இதற்கு முன்பாக வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்ற வனிதா நாமினேட் ஆன முதல் முதல் முறையே வெளியேற்றப்பட்டு விட்டார்.

சேரனுக்கும் அதே நிலை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

இதனால் இந்த வாரம் சேரன் வெளியேற்றத்திற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் முடிவு என்னவோ யாருக்கு தெரியும்?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.