Bigg Boss 11th Eviction Update

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆஜித் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 11th Eviction Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் படு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி இன்று 90வது நாள் ஒளிபரப்பாக உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் முற்றிலுமாக பிக்பாஸ் சீசன் 4 முடிவடைய உள்ளது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் செட்டி, சுசித்ரா, சம்யுக்தா, நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் ஆஜித், கேபிரெல்லா, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் மற்றும் சோம் சேகர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் ஆஜீத் மிக மிக குறைவான ஓட்டுகள் பெற்றதால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளர் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

ஆரியின் ரசிகர்கள் இந்த வாரம் எப்படியாவது ரம்யா பாண்டியனை வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில் அது நடக்காமல் போய்விட்டது.