Bigg Boss 11th Eviction Analysis

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss 11th Eviction Analysis : தமிழ் சின்ன திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, ரமேஷ், அர்ச்சனா, சுசித்ரா என பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து இந்தவார வெளியேற்றத்திற்கான நாமினேஷன் பட்டியலில் சோம் சேகர், கேப்ரெல்லா, சிவானி, ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களின் சோம் சேகர் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக கேப்ரெல்லா நிறைய ஓட்டுக்களை பெற்று உள்ளார்.

இவர்களில் ஆஜித் தான் மிக மிக குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக ஷிவானி நாராயணன் குறைந்த ஓட்டுகளை பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் இந்த வாரம் ஆஜித் வெளியேறுவார், அப்படியில்லை என்றால் ஷிவானி நாராயணன் அல்லது இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.