பிக் பாஸ் சீவின் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் சீவின் கணேசன். மாடலிங் துறையை சார்ந்த இவர் திருநங்கையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து இந்நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

தற்போது மீண்டும் தனது மாடலிங் பணியில் ஈடுபட்டு வரும் ஷிவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் கவர்ச்சிகரமாக எடுத்திருக்கும் அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.