பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவை சக போட்டியாளர்கள் பயமுறுத்தி உள்ளனர் அந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல் ஆன விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேவரட் நிகழ்ச்சியாக திகழ்ந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

ஆட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே ஜி பி முத்துவை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!!!.. வெளியான வீடியோ வைரல்!.

இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் ஒலிபரப்பாவது மட்டுமின்றி 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களும் தற்போது பொழுது போக்காளர்களாக மாறியுள்ளனர். அதாவது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜி பி முத்து என்பவரை சக போட்டியாளர்கள் வம்பு இழுத்து வருகின்றனர். இது குறித்து ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே ஜி பி முத்துவை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!!!.. வெளியான வீடியோ வைரல்!.

அந்த வீடியோ பதிவில், இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் ஜி பி முத்துவை சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் கீழே குனிந்து சென்று அவரை சீண்டி பயமுறுத்தி இருக்கிறார். அந்த சீண்டலால் பயந்து போன ஜிபி முத்து பெட்டில் இருந்து உருண்டு கீழே விழ அங்கிருந்த அனைவரும் அவரைப் பார்த்து சிரிக்கின்றனர். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.